4. மனக்கோளாறுகள் எத்தனை வகை?
உலகத்தில் உள்ள நோய்களை எல்லாம் கண்டு, வகைப்பகுத்து, வரிசைப்படுத்தி அட்டவணைப் படுத்துயுள்ளார்கள். இப்படி அட்டவணைப் படுத்திய வியாதிகள்தான் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இதற்கு நோய்களின் பன்னாட்டு வகுப்பொழுங்கு (International classification of diseases) என்று பெயர். அடிக்கடி புதிய ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் திருத்தங்கள் செய்து சீராக்குவார்கள். இதை உலக சுகாதார நிறுவனம் செய்து வருகிறது. ஐரோப்பாவிலும் நம் நாடுகளிலும் இதுவே பின்பற்றப்படுகிது. 1992ல் இதன் 10வது பதிப்பு வெளியிடப்பட்டது. இதன் 11வது பதிப்புக்கான திருத்தங்கள் தற்போது செய்யப்பட்டும் பிரசுரிக்கப் பட்டும் வருவருகின்றன. இது முழு அளவில் 2015ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகைப்பாடு மனக்கோளாறுகளுக்கு மட்டுமின்றி சகல வியாதிகளையும் உள்ளடக்கியது. இந்த ஆவணத்தில் 300ருக்கு அதிகமான மனக்கோளாறுகள் பட்டியலிடப் பட்டிருக்கிறன. இதில் சில முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம். இதே போல, வட அமெரிக்காவில் DSM5 (2013)என்ற வகைப்பாடு பாவிக்கப்படுகிறது [2]. இவை இரண்டுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இல்லை.
உடல் நோய்கள் போலவே, மனக்கோளாறுகளிலும் நூற்றுக் கணக்கான நோய்களும் கோளாறுகளும் உள்ளன. இவைகளை இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் இரண்டு பெரும் பிரிவுகளாக வகுக்கப் பட்டுள்ளன. ஒன்று மனப் பிறழ்வு நிலைகள் (psychoses) எனும் கடும் மனக்கோளாறுகள் , மற்றது நரம்புத் தளர்ச்சி (neuroses) எனப்படும் பொது மனக்கோளாறுகள்.
மனப் பிறழ்வும் நரம்புத் தளர்ச்சியும்
மனப் பிறழ்வு நிலைகளில் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்தும், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். தான் என்ற சுயத்துக்கும் வெளி உலகுக்கும் இடையே உள்ள வேறுபாடு சிதைந்து போவதே இதற்க்குக் காரணம். தன் மன வெளியில் ஏற்படும் அனுபவங்களுக்கும் புறஉலக யதார்த்தங்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அகத்துக்கும் புறத்துக்கும் இடையே ஊள்ள வித்தியாசம் சிதைந்து போவதே மனப் பிறழ்வுக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். எனவே, இவர்கள் தன்னிலை (insight) அறிவதில்லை. மற்றவர்கள் இதை சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக் கொள்வதில்லை.
இயல்பு வாழ்க்கையில் நாம் நமக்குள் சிந்திகிறோம், சில சமயங்களில் நாம் நமக்குள்ளே பேசிக் கொள்வகிறோம். இந்த உள் உரையாடல்கள் மற்றவர்கள் அறியாதவை. ஆனால், பிறழ்வு நிலைகளில் இவை மற்றவர்களின் குரல்களாக, 'மாயக் குரல்களாக' (auditory hallucination) ஒலிக்கும், பிறழ் நம்பிக்கைகள் (delusions) உருவெடுக்கும். இதனால் இந்த நிலையில் உள்ளவர்களின் சிந்தனை, புலணுனர்வு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதினால் இவர்களின் செயல்கள் அர்தமற்றவையாக பிறருக்குத் தோன்றும்.

இந்த
வகைப்பாடு மிகப் பழமையானது
ஆயினும் இந்த அடிப்படை
வித்தியாசம் முக்கியமானது.
இவற்றை
ஒன்றோடொன்று குழப்பிக்
கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய
தெளிவின்மைக்கு ஒரு காரணம்.
தற்போது
இவை முறையே கடும் அல்லது
முதிர் மன நோய்கள் (severe
mental illnesses) என்றும்
பொதுவான அல்லது மிதமான
மனக்கோளாறுகள் (common
mental disorders) எனவும்
அழைக்கப்படுகின்றன.
மனப் பிறழ்வு நிலைகளில் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்தும், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். தான் என்ற சுயத்துக்கும் வெளி உலகுக்கும் இடையே உள்ள வேறுபாடு சிதைந்து போவதே இதற்க்குக் காரணம். தன் மன வெளியில் ஏற்படும் அனுபவங்களுக்கும் புறஉலக யதார்த்தங்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அகத்துக்கும் புறத்துக்கும் இடையே ஊள்ள வித்தியாசம் சிதைந்து போவதே மனப் பிறழ்வுக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். எனவே, இவர்கள் தன்னிலை (insight) அறிவதில்லை. மற்றவர்கள் இதை சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக் கொள்வதில்லை.
இயல்பு வாழ்க்கையில் நாம் நமக்குள் சிந்திகிறோம், சில சமயங்களில் நாம் நமக்குள்ளே பேசிக் கொள்வகிறோம். இந்த உள் உரையாடல்கள் மற்றவர்கள் அறியாதவை. ஆனால், பிறழ்வு நிலைகளில் இவை மற்றவர்களின் குரல்களாக, 'மாயக் குரல்களாக' (auditory hallucination) ஒலிக்கும், பிறழ் நம்பிக்கைகள் (delusions) உருவெடுக்கும். இதனால் இந்த நிலையில் உள்ளவர்களின் சிந்தனை, புலணுனர்வு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதினால் இவர்களின் செயல்கள் அர்தமற்றவையாக பிறருக்குத் தோன்றும்.
உதாரணத்துக்கு,
மனப் பிறழ்வு
நிலையில் இருந்த ஒருவரின்
அனுபவம்:
மாறாக, நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களிடம் காணப்படும் அறிகுறிகள் சாதாரண, இயல்பான உணர்நிலைகளின் மிகையான வெளிப்பாடுகளே ஒழியே வேரொன்றும் இல்லை (வரைபடம் 1) சாதாரண அனுபவங்களான பற்றம், அச்சம், மனச் சஞ்சலம் போன்ற உணர்நிலைகள் எல்லை மீறிய அளவில் உண்டாகும் போது தனி ஒருவருக்கு வேதனையும் துன்பமும் ஏற்படலாம், அவர் செயல்பாடுகளும் பாதிக்கப் படலாம். ஆனால் தனது அனுபவத்தை அவர் மறுப்பதில்லை. அவர் அவதிப் படுவது உண்மை என்பதை ஏற்றுக் கொள்ளும் தன்னிலை உணர்வு அவருக்கு உண்டு. இவற்றை மனநோய்கள் என அழைப்பது தவறு, மனக்கோளாறுகள் என்று கூறுவதே பொருந்தும். மேலும், பிறழ் மனநிலைகளுக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை வலியுறுத்த உதவும். இதனால்தான் இவை பொது மனக்கோளாறுகள் என்று அழைக்கப் படுகின்றன.
மனப் பிறழ்வுக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் இடையே உள்ள இந்த வித்தியாசங்கள் முக்கியமானவை என்றாலும், சில சமயங்களில் இவை இரண்டும் கலந்து காணப்படுவதும் உண்டு. ஆனால், இப்போதைக்கு எளிமை கருதி இவ்விரண்டையும் வெவ்வேறாகப் பார்ப்பது நல்லது. இந்த வலைப்பூவில் மனநோய் என்ற சொல் மனப் பிறழ்வுகளை உள்ளடக்கிய கடும் மனக்கோளாறுகளுக்கு மட்டும் உபயோகிக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் மனக்கோளாறுகள் என்று பெயரிடப்பட்டுள்ளன.
தனித்தனி மனக்கோளாறுகளைப் பற்றி ஆராயுமுன் அவற்றை பின்வருமாறு வகைப் படுத்தி மனதில் பதிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்:
“என்னை ஏன் மற்றவர்கள் வினோதமாகப் பார்க்கிறார்கள்? ஏதோ சதி நடக்கிறது. இவர்கள் என் விரோதிகள். அவன் என்னைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிக்கிறான், என்னைப் பற்றி எனென்னவோ பேசிக் கொள்கிறார்கள். ஒருவன் என்னோடு பேசிக் கொண்டே இருக்கிறான். 'போதும், வாயை மூடு' என்று சொன்னாலும் அவன் கேட்பதாகத் தெரியவில்லை".பிறழ் மனநிலையில் இருந்து மீண்டதும் இந்த அனுபவம் அவருக்கே வினோதமாகத் தோன்றியது. “நானா இப்படி நடந்து கொண்டேன்?” என்று கேட்டார்.
மாறாக, நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களிடம் காணப்படும் அறிகுறிகள் சாதாரண, இயல்பான உணர்நிலைகளின் மிகையான வெளிப்பாடுகளே ஒழியே வேரொன்றும் இல்லை (வரைபடம் 1) சாதாரண அனுபவங்களான பற்றம், அச்சம், மனச் சஞ்சலம் போன்ற உணர்நிலைகள் எல்லை மீறிய அளவில் உண்டாகும் போது தனி ஒருவருக்கு வேதனையும் துன்பமும் ஏற்படலாம், அவர் செயல்பாடுகளும் பாதிக்கப் படலாம். ஆனால் தனது அனுபவத்தை அவர் மறுப்பதில்லை. அவர் அவதிப் படுவது உண்மை என்பதை ஏற்றுக் கொள்ளும் தன்னிலை உணர்வு அவருக்கு உண்டு. இவற்றை மனநோய்கள் என அழைப்பது தவறு, மனக்கோளாறுகள் என்று கூறுவதே பொருந்தும். மேலும், பிறழ் மனநிலைகளுக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை வலியுறுத்த உதவும். இதனால்தான் இவை பொது மனக்கோளாறுகள் என்று அழைக்கப் படுகின்றன.
மனப் பிறழ்வுக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் இடையே உள்ள இந்த வித்தியாசங்கள் முக்கியமானவை என்றாலும், சில சமயங்களில் இவை இரண்டும் கலந்து காணப்படுவதும் உண்டு. ஆனால், இப்போதைக்கு எளிமை கருதி இவ்விரண்டையும் வெவ்வேறாகப் பார்ப்பது நல்லது. இந்த வலைப்பூவில் மனநோய் என்ற சொல் மனப் பிறழ்வுகளை உள்ளடக்கிய கடும் மனக்கோளாறுகளுக்கு மட்டும் உபயோகிக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் மனக்கோளாறுகள் என்று பெயரிடப்பட்டுள்ளன.
தனித்தனி மனக்கோளாறுகளைப் பற்றி ஆராயுமுன் அவற்றை பின்வருமாறு வகைப் படுத்தி மனதில் பதிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்:
மனக்கோளாறுகள்: ஓர் எளிய வகைப்பாடு
(முக்கிய சில கோளாறுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன)
|
இனி சில முக்கியமான மனக்கோளாறுகளை மேலோட்டமாகப் பார்ப்போம்.
மனப்பிறழ்வு மனநிலை (psychosis) காணப்படும் மனநோய்கள் பல உண்டு. அதிஷ்டவசமாக, பிரதானமாக இரண்டு மனக்கோளாறுகளில் மட்டுமே நோய்களிலேயே பிறழ் மனநிலை காணப்படுகிறது. ஒன்று மனச்சிதைவு (schizophrenia), மற்றது இருமுனையக் கோளாறு (Bipolar disorder; manic depression) [இவற்றுக்கு இடைப்பட்ட மனக்கோளாறுகளும் உண்டு. இப்போதைக்கு இவைகளைத் தவிர்த்துக் கொள்வோம்]. இவை இரண்டும் கடும் மனக்கோளாறுகள். இவற்றை மனநோய்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம்.
அடுத்தது, நரம்புத் தளர்ச்சி என்று பொதுவாக அழைக்கப்படும் மனக்கோளாறுகள். இதில் மனச்சோர்வும் (depression) பதற்றக் கோளறுகள் (anxiety disorders) முக்கியமானவை. இதைப் போலவே, எந்த வித உடல் அல்லது மனம் சார்ந்த நோய்களும் இன்றி உடல் வலி, களைப்பு, மூட்டு வலி, தலை வலி போன்ற நோய்க் குறிகள் காணப்படும் ஒரு மனப் பாதிப்பும் உண்டு. இவை உளவியல் காரணங்களால் உண்டாகின்றன என்று நம்பப்படுவதால் உளவியல் சார்ந்த உடல் கோளாறுகள் (psychosomatic disorders; somatoform disorders) என்று அழைக்கப்படுகின்றன. மனம் சார்ந்த பிரச்சினைகள் உடல் வழியாக வெளிப்படுவதனால் இது உடலாக்கம் (somatisation) என்று வழங்கப் படுகிறது. இவை நம் நாடுகளில் கூடுதலாகக் காணப்படுகிறன. மருத்துவர்களுக்கு பெரும் தலையிடியாக (!) இவை இருந்து வருகின்றன.
பிற மனக்கோளாறுகள்
மனத்தேய்வு (dementia) என்பது பொதுவாக முதுமையில் ஏற்படும் மறதி நோய். இதில் அல்சைமர் மறதி நோய் (Alzheimers disease) முக்கியமானது. மூளையில் மெதுவாக ஏற்படும் தேய்வு (degeneration) மறதியையும் பிற குண மாற்றங்களையும் உண்டாக்கும். இது குணமாக்க முடியாத ஒரு நோய்.
மது மற்றும் போதைப் பொருள் பாவனையின் ஒரு முக்கிய விளைவு சார்பு நிலை (dependance). இதுவும் ஒரு மனக்கோளாறாகக் கருதப்படுகிறது.
இவற்றைத் தவிர, உளவியல் காரணங்களால் எற்படும் பாலியல் கோளாறுகள் (psychosexual disorders), உண்ணல் கோளாறுகள் (eating disorders), ஆளுமைக் கோளாறுகள் (personality disorders) ஆகியவையும் மனக் கோளாறுகளாகக் கருதப்படுகின்றன.
குழந்தைகளுக்கும் குமரப் பருவத்தினருக்கும் ஏற்படும் மனக்கோளாறுகள் (Child and Adolescent Mental Health Disorders) பல உண்டு. இதில் சில வயது வந்தவர்கள்களுக்கு ஏற்படும் கோளாறுகள், மற்றவை இப்பருவத்தினருக்கு பிரத்தியேகமானவை. குழந்தைகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு கோளாறு அவதானக் குறைபாடும் மிகைச் செயலும் (Attention Defeceit Hyperactivity Disorder; ADHD) என்பது. இதைத் தவிர பல வளர்ச்சிக் குறைபாடுகளும் காணக் கிடைக்கின்றன. மன வளர்ச்சிக் குறைபாடு (mental retardation) ஒரு மனநோயே அல்ல. அது குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. தற்போது இதை அறிவாற்றல் குறைபாடு (intellectual disability) என்று அழைப்பதே சரியானது என்று கருதப்படுகிறது. சிறார்களுக்கும் குமரப் பருவத்தினருக்கும் காணப்படும் கற்றல் குறைபாடுகள் பல. இதில் dyslexia என்ற வாசிப்பு குறைபாடு முக்கியமானது. இன்னொரு வளர்ச்சிக் குறைபாடு ஆட்டிசம் ஆகும்.

[1] American
Psychiatric Association (2013) Diagnostic and Statistical Manual of
Mental Disorders (5th ed.; DSM-5) Washington, DC: Author.
[2]
World Health Organization, (2004). International Statistical
Classification of Diseases and Health Related Problems (ICD 10).
Geneva: World Health Organization.