ஆட்டிசம்: ஒரு பன்முகப் பார்வை
இயல் 8. மழையும் புயலும்: ஆட்டிசத்துடன் இணைந்துவரும் குறைபாடுகள்
கெடுவாய்ப்பாக,
ஆட்டிசம்
தனித்து வருவது இல்லை.
அதாவது
ஆட்டிசம் உள்ள குழந்தைகளிடையே
வேறு சில குறைபாடுகளும்
கோளாறுகளும் காணப்படும்.
வளமான
நிலத்தில் பயிரோடு சேர்ந்து
களைகளும் வளருவது போல ஆட்டிசத்தில்
பிற கோளாறுகளும் மிகுந்து
காணப்படுகின்றன.
இவை
இணைந்து வரும் குறைபாடுகள்
(comorbidity)
என்று
அழைக்கப்படுகின்றன. இதனால், கூடா
நண்பர்கள் போல ஒட்டிக்கொள்ளும்
இந்த கோளாறுகளால் ஆட்டிசம்
உள்ளவருக்கு ஏற்படும் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆட்டிசம்
பற்றி பலருக்கு குழப்பங்கள்
ஏற்படுவதற்கு ஒரு முக்கிய
காரணம் இவர்கள் இணைந்து வரும்
குறைபாடுகளையும் ஆட்டிசத்தையும் பிரித்துப் பார்க்காததே.
மழையும்
புயலும் வெவ்வேறாக வரலாம்,
இணைந்தும்
வரலாம்.
ஆனால்
மழை வேறு,
புயல்
வேறு.
இவ்வாறு
இணைந்தும் வரும் குறைபாடுகளில்
அறிவாற்றல் குறைபாடு,
உடலியக்க ஒருங்கிணைப்புக்
கோளாறு,
கவனக்குறைவும்
மிகைஇயக்கக் கோளாறும்
(எ.டி.எச்.டி), வலிப்புநோய்,
ஆகியவை
முக்கியமானவை. அத்தோடு, குழந்தைகளுக்கு பல உளவியல் தாக்கங்களும் உண்டாகின்றன.
அறிவாற்றல் குறைபாடு (intellectual disability; mental retardation)
அறிவாற்றல்
என்றால் என்ன?
அறிவுடைமை,
புத்திக்
கூர்மை,
அறிவு
நுட்பம் ஆகிய சொற்கள்
ஒருவருக்குள்ள அறிவாற்றலைச் சுட்ட பயன்படுத்தப்படுகிறன.
உளவியலில்
இது நுண்ணறிவு (intelligence)
என்று
அழைக்கப்படுகிறது.
சிந்திக்கும்
திறன்,
ஒரு
விஷயத்தை பகுத்தறிந்து
புரிந்துகொள்ளும் ஆற்றல்,
எண்ணக்கருக்களை
புறிந்துகொள்ளும் வல்லமை,
கற்றுக்
கொள்ளும் திறமை
போன்றவை இதில் அடங்கும்.
ஒரு
மனிதனின் நுண்ணறிவை அளக்க
பல வகையான உளவியல்
சோதனைகள் உள்ளன.
இவற்றில்
இருந்து பெறப்படும்
நுண்ணறி ஈவு (intelligence
quotient; IQ)
உளவியலில்
பெரிதும் விவாதிக்கப்படும்
ஒரு பொருள்.
ஆனாலும்
ஒரு மனிதனின் அறிவாற்றலின்
அளவை மதிப்பிட இது பயனுள்ளது.
சராசரியாக ஒரு மனிதனின் நு.
ஈ.
100 புள்ளிகள் என்று கணக்கிடப்படுகிறது.
மக்கட்
தொகையில் ஏறத்தாழ 70%
பேர் நு.ஈ 85 புள்ளிகளுக்க்கும் - 115 புள்ளிகளுக்கும் இடைப்பட்ட புள்ளிகள் கொண்டவர்களாக இருப்பர். ஒருவருக்கு
நு.ஈ.
70 புள்ளிகளுக்குக்
குறைவாக இருந்து அதனால் அவரது
அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும்
போது அது அறிவாற்றல் குறைபாடு (intellectual disanility; mental retardation)
என்று வரையறுக்கப்படுகிறது. இது தமிழில் அற்றிவாற்றல் குறைபாடு என்றும் மனவளர்ச்சிக் குறைபாடு என்றும் வழங்கப்படுகிறது.
ஆட்டிசமும்
அறிவாற்றல் குறைபாடும் ஒன்றல்ல
என்று முன்னர் கூறினோம்.
அறிவாற்றல்
குறைபாட்டில் ஏறக்குறைய
எல்லாத் திறன்களும் குன்றி
இருக்கும்.
பேச்சு,
கற்கும்
திறன்,
சமூகத்
திறன்,
உடல்
இயக்கத் ஆற்றல் போன்ற திறன்கள்
யாவும் சராசரி அளவை விட
குறிப்பிடத்தக்க அளவு குறைவாக
இருக்கும்.
அறிவாற்றல்
குறைபாடு உள்ள குழந்தைகளின்
பேச்சு வளர்ச்சி,
எழுந்து
உட்காருதல்,
நடத்தல்
போன்ற உடல் இயக்கத் திறன்கள்
போன்றவற்றின் வளர்ச்சியும்
தடைப்பட்டிருக்கும். அதாவது
இவர்களின் பெரும்பாலான
வளர்ச்சி மைல்கல்கள் பின்தங்கி
இருக்கும். இதுவே ஆட்டிசத்துக்கும் அறிவாற்றல் குறைபாட்டுக்கும் உள்ள வித்தியாசம்.
ஆட்டிசம்
உள்ளவர்களில் ஏறத்தாழ
அரைவாசிப்பேருக்கு
அறிவாற்றல் குறைபாடு உண்டு [1].
அறிவாற்றல்
குறைபாடும் அட்டிசமும் ஒருங்கு
சேர்ந்து வரும்போது அது கன்னர்
சின்றோம் என்று அழைக்கப்படுகிறது.
இது
ஆட்டிசத்ததின் கடுமையான ஒரு
வகை.
ஆட்டிசத்தில்
காணப்படும் தனிப்
பண்பு சமூக உறவாடலில் உள்ள
குறைபாடுகளே (பார்க்க இயல் 2) என்பதை குழந்தைநல மருத்துவர்களும்
மற்றவர்களும் நினைவில்
நிறுத்திக் கொண்டால் இந்த தவறு
ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக
இருக்கும்.
உடல் ஒருங்கிணைப்பு வளர்ச்சிக் குறைபாடு (developmental coordination disorder)
உடல்
ஒருங்கிணைப்புக் குறைபாட்டில்
உடலில் உள்ள தசைகளில் இயக்கமும்
ஒருங்கிணைப்புத் திறனும்
பாதிக்கப்படுகிறது.
பெரும்
தசைகளில் அசைவு பாதிக்கப்படுவதால்
நடத்தல்,
ஓடுதல்,
பாய்தல்,
போன்ற
செயல்கள்களும் உடுத்தல்,
உண்ணல்,
தலை வாருதல்
போன்ற அன்றாட செயல்பாடுகளும்
பாதிக்கப்படுகின்றன.
இவர்கள்
அடிக்கடி
தடுக்கி விழுவதும் உண்டு.
படிகளில்
ஏறி இறங்க இவர்கள் சங்கடப்படலாம்.
விளையாடும்
போது பந்தைப் பிடிப்பதும்
வீசுவதும் இவர்களுக்கு
கைவருவதில்லை.
கையின்
சிறு தசைகளும் சீராக இயங்குவதில்லை.
விரல்களை
நேர்த்தியாகப் பாவிக்க
முடியாமையினால் எழுதுதல்,
கோர்த்தல்,
வரைதல்,
கத்தரிக்கோல்
பாவித்தல் போன்ற
செயல்கள் பாதிக்கப்படுகின்றன.
மிகுசெயல் கவனக்குறைவு கோளாறு (Attention Deficit Hyperactivity Disorder)
இதன்
முக்கிய அறிகுறிகள் ஒரு
செயலில் தொடர்ந்து கவனம்
செலுத்த இயலாமை,
ஒரு
காரியத்தை முடிக்காமல்
பாதியில் விட்டு விடுவது,
தேவையற்ற
வேறு செயல்களில் ஈடுபடுவது
முதலியவையே.
கூடவே,
வரம்பு
மீறிய இயக்க நிலை, அளவுக்கு
அதிகமான துறுதுறுப்பும், மிகை
இயக்கமும் பள்ளியில் இவர்களுக்கு
பல பிரச்சினைகள் உண்டுபண்கிறது.
எ
டி எச் டி உள்ள ஒரு ஒரு ஐந்தாம்
வகுப்புப் பையனை ஓர் ஆசிரியை
பின்வருமாறு விவரித்தார்:
“இவன்
ஒரு இடத்தில் இருக்க மாட்டான்;
கைகாலை
வைத்துக்கொண்டு சும்மா இருக்க
மாட்டான்,
ஏதாவது
செய்துகொண்டே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால்
தலை வெடித்துவிடும்;
இருக்கையில்
இருந்தாலும் இருப்புக்
கொள்ளாது;
நடக்க
மாட்டான்,
ஓடுவான்".
வலிப்புநோய் (epilepsy)
ஆட்டிசம் உள்ளவர்களிடையே வலிப்பு நோய் கூடுதல் அளவில் காணப்படுகிறது. மற்றவர்களை விட ஆட்டிசம் உள்ளவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு சாதரணமான குழந்தைகளை விட எட்டு மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன [2]. ஆட்டிசம் உள்ளவர்களுக்கு வலிப்புநோய் எந்த வயதிலும் உண்டாகலாம். மதுசூதன் சீநிவாஸ் என்ற இந்திய ஊடகவிலாளர் தன் 23 வயதான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு கூறிகிறார்: "என் மகனுக்கு வலிப்புநோய் பதினொரு வயதில் ஏற்பட்டது. அவன் தன்னையறியாமல் தன் ஆடையில் சிறுநீர் கழித்துவிடுவான். இது அவனுக்குள்ள வலிப்புநோயால் ஏற்படுகிறது என்று அறிந்து கொண்டோம். அவன் முகம் சுழிப்பதை வைத்தே அவன் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டான் என்று எங்களால் கூற முடியும். ஆனால், மற்றவர்களின் நாற்காலியிலும், திரைப்படம் பார்க்கும் போதும் இது நடந்தால் இதை எவ்வாறு மற்றவர்களுக்கு விளக்குவது?" [3].
உளவியல் தாக்கங்கள்
ஆட்டிசம்
உள்ளவர்களின் உளவியல் தேவைகள்
பல. வளர
வளர தாம் மற்றவர்களைப் போல
இல்லை என்பதை மெல்ல
மெல்ல உணரத் தொடங்குகிறார்கள். தமக்கு ஏதோ ஒரு குறைபாடு
உள்ளது என்பதை உணர்ந்து அதைத்
அகவயமாக்கிக் கொள்கிறார்கள். இவே அவர்களின் தன்னடையாளமாகி, ஆட்டிசக் குறைபாடு
அவர்களின் ஆளுமையில் ஓர்
அங்கமாக பதிந்துவிடுகிறது.
மேலும்,
பிற குழந்தைகளின்
ஏளனம்,
ஆசியர்களின்
கண்டனங்கள்,
பெற்றோரின்
கடுஞ்சொற்கள் இவர்கள் மனதில்
ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றவர்கள்
தம்மை குறை உள்ளவர்களாக
எடைபோடுகிறார்கள் என்பது
இவர்களுக்கு பெரும் மனவேதைனை
அளிக்கிறது.
இதனால்
தங்களையே வெறுக்கிறார்கள்.
இது அவர்களின்
தன்மதிப்பையும் வெகுவாகப்
பாதிக்கிறது.
இதற்கு
எதிர்வினையாக சிலர் பிடிவாதம்,
எதிர்த்துப்
பேசுதல்,
பொய் சொல்லுதல்,
சண்டை சச்சரவு
போன்ற தீய பழக்கங்களில்
ஈடுபடுவதுண்டு.
வேறு சிலர்,
குறிப்பாக
பெண்பிள்ளைகள்,
மனச்சோர்வு
அடைவதுண்டு.
எனவே ஆட்டிசம்
உள்ளவர்களின் குறைநிறைகளை
பெற்றோரும் ம் ஆசிரியர்களும்
உணர்ந்து நடந்துகொள்வது
முக்கியம்.
எனவே, ஆட்டிசத்தின் நேரடி பாதிப்பு ஒரு பக்கமிருக்க. அதனுடன் இணைந்து வரும் குறைபாடுகளும் உளவியல் தாக்கங்களும் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள், ஆசிரியர், மருத்துவர், மனநலப்பணியாளர் ஆகியோர் அறிந்துவைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். இதை கீழே தரப்பட்டுள்ள படம் விளக்குகிறது:
எனவே, ஆட்டிசத்தின் நேரடி பாதிப்பு ஒரு பக்கமிருக்க. அதனுடன் இணைந்து வரும் குறைபாடுகளும் உளவியல் தாக்கங்களும் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள், ஆசிரியர், மருத்துவர், மனநலப்பணியாளர் ஆகியோர் அறிந்துவைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். இதை கீழே தரப்பட்டுள்ள படம் விளக்குகிறது:
[1] Nishiyama T.H., Taniai, et al., Genetic corelation between autistic traits and IQ in a population-based sample of twins with autism spectrum disoders, Journal of Human Genetics, 54(1), 56-61.
[2] Sundelin, H.E.K, Larsson, H, Lichenstein et al. (2016) Autism and epilepsy: A population-based cohort study, Neurology, 87(2), 192-7.
[3] Srinivas M. (2016) Abhimanyu, Our son p. 98, In A book of light: when a loved one has a different mind (Ed. Pinto, J), Speaking Tiger Publishing, New Delhi.


