ஆட்டிசம்: ஒரு பன்முகப் பார்வை
இயல் 9. சிறப்பு ஆற்றல்களும் தனித்திறமைகளும்
"ஆட்டிசம் உள்ளவர்கள் உலகத்தை வேறுவிதமாகப் பார்க்கிறார்கள்...... ஆட்டிசம் உள்ள ஒரு சிலருக்கு ஒரு தனித்திறமை வாய்த்திருக்கும். இவர்கள் autistic savants என்று அழைக்கப்படுகிறார்கள். ஆட்டிசம் உள்ளவர்களில் 10% க்கு மட்டுமே இம்மாதிரியான திறமைகள் உள்ளன".
இதுவரை
ஆட்டிசம் ஒரு குறைபாடாகவே
சித்தரிக்கப்பட்டது.
ஆனால்
இந்த பாதிப்பு உள்ளவர்கள்
மற்றவர்களில் இருந்து
மாறுபட்டவர்கள்.
பிறருக்கு
வித்தியாசமாகத் தோன்றினாலும்,
அவர்கள்
குணாம்சங்களையும் நடவடிக்கைகளையும்
உற்று நோக்கும் போது அவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் பெரும்
வேறுபாடு இல்லை,
சில
பண்புக் கூறுகள் மிகுதியாகவும்
வேறு சில குறைவாகவும்
காணப்படுகின்றன.
அவ்வளவுதான்.
சிறப்பு ஆற்றல்கள்
ஆட்டிசத்தை
விரிவாகவும் ஆழமாகவும்
ஆராய்ச்சி செய்தவர்கள்
ஆட்டிசம் உள்ளவர்களின்
மூளையின்செயல்பாடுகளில்
பெரும் குறைபாடுகள்
இல்லை என்று கூறுகிறார்கள்.
மேலும்,
ஆட்டிசம்
உள்ள அறிவாளிகள் தம் அனுபங்களைப்
பற்றி விரிவாக எழுதி உள்ளார்கள்.
இவற்றில்
இருந்து தெரிய வருவது என்னவென்றால்
ஆட்டிசம் உள்ளவர்கள் உலகத்தை
வேறு விதமாகப் பார்க்கிறார்கள்
என்பதே.
எனவே,
நாம்
எமது தராதரங்களை வைத்தே இதை
ஒரு குறைபாடு என்று கூறுகிறோமோ
என்ற ஐயப்பாடு எழுகிறது.
காட்டாக,
ஒருவருக்கு
பல நண்பர்கள் இருக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை.
இதை
ஒரு 'ஆட்டிசக்
குறைபாடாக'
கருதுவது
சரிதானா?
வேற்றுலகக்
கிரகவாசி ஒருவன் இவர்களை
மற்ற மனிதர்களில் இருந்து
வேறுபடுத்திப் பர்ப்பார்களா
என்பது சந்தேகத்துக்குரியது.
மேலும்,
இவர்களில்
பலருக்கு குறிப்பிட்ட சில
ஆற்றல்களும் திறமைகளும் உள்ளன என்பதை ஆராய்ச்சிகள்
எடுத்துக்காட்டுகின்றன.
சிலர்
அபாரமான ஞபக சக்தி உள்ளவர்களாக
இருப்பார்கள். சிலர்
சிறப்பான கைத்திறன் உள்ளவர்களாக,
மாதிரிகள்
(models)
உருவாக்குவதில்
வல்லவர்களாக
இருப்பார்கள்.
ஆட்டிசம்
உள்ள ஒரு பத்து வயதுச் சிறுவன்
சிட்னியில் உள்ள ஒபரா ஹவுஸ்
என்ற கட்டிடத்தை அச்சு மாறாமல்
சிறு மரக் கட்டைகளால் செய்து
காட்டினான்.
இன்னும்
சிலர் மற்றவர்களின் குரலின்
பேசும் திறன் கொள்டவர்களாக
இருப்பார்கள்.
எட்டு
வயதான ஒரு சிறுவன் டிஷ்னியின்
மிக்கி மௌஸ் போல கீச்சிக்
குரலின் பேசும் ஆற்றல்
கொண்டிருந்தான்.
இவர்கள்
கற்றுக்கொள்ளும் விதமும்
வித்தியாசமானது.
பொதுவாகவே
எழுத்துருவில் உள்ளவைகளை
விட பட உருவில் உள்ளவைகளை
விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
புத்தகப்
படிப்பைவிட செய்முறைகளின்
வழியாகக் கற்பது இவர்களுக்கு
சுலபமாக உள்ளது.
இம்மாதியான
கற்கும் பாங்கு பருங்காட்சித்
திறன் (visuo-special
ability) என்று
அழைக்கப்படுகிறது.
ஆசிரியர்கள்
இதை கவனத்தில் கொள்வது
முக்கியம்.
இதேபோல,
மற்றவர்கள்
கண்களுக்குப் பட்டாத உள்ள
மிகச் சிறிய நுணுக்களைக்
இவர்களால் கண்டறிய முடிகிறது.
உதாரணமாக,
கீழ்
காணும் படத்தைப் பாருங்கள்.
அதில் எத்தனை
கருவிகள் புதைந்து கிடக்கின்றன
என்று உங்களால் கூற முடியுமா?
ஆட்டிசம்
உள்ள சிலர் இதை சில நொடிகளில்
கண்டிபிடித்து விடுவார்கள் (விடை இயல் முடிவில்).
தனித் திறமைகள்
ஆட்டிசம்
உள்ளவர்களில் 10
சதவிகிதத்தினருக்கு
சில தனித் திறமைகள் உள்ளன.
1988 இல் வெளிவந்த ரெயின் மேன் (Rain man) என்ற
படம் இதை நயமாகக் காட்சிப்படுத்தியிருந்தது.
இதன்
கதாநாயகன் ஆட்டிசமத்தால்
பதிக்கப்பட்டவன்.
அனால்
அவனுக்கு அபாரமான ஞாபக சக்தி
உண்டு,
தொலைபேசி
எண்களை மனனம் செய்வது இவன்
பொழுது போக்கு.
உணவு
பரிமாறும் ஒரு பெண் தன் உடையில் அணிந்திருந்த பெயர் அணியத்தைப் பார்த்தவுடன்
அவளின் தொலைபேசி எண்ணைக்
கூறிவிடுகிறான்.
அதேபோல,
அவனுக்குள்ள
அதீத நினைவாற்றலால் சூதாட்டத்திலும்
வென்றுவிடுகிறான்.
இதை
அறிந்த அவன் சகோதரன் பந்தயம்
கட்டி நிறைய பணம் சம்பாதித்து
விடுகிறான்.
சிலர்
ஆயிரக் கணக்கான கார்களின்
எண்கள்,
தொலைபேசி
எண்கள் போன்றவற்றை வியப்புறும்
படி மனனம் செய்து ஞாபகத்தில்
வைத்திருப்பார்கள்.
எப்போதா
அவர்கள் சந்தித்த ஒருவரின்
பிறந்த நாளைக் கூட ஞாபகத்தில்
வைத்திருந்து மீண்டும்
ஒப்பிப்பார்கள்.
வேறு
சிலர் வரைகலையில்
அளவற்ற திறன் கொண்டவர்களாக
இருப்பார்கள்.
ஆட்டிசம்
உள்ள ஸ்டீவன் வில்ட்சயர்
என்பவர் ஒரு கட்டிடத்தை அல்லது
காட்சியை ஒரு கணம் பார்துத்
விட்டு அதை அப்படியே வரையும்
ஆற்றல் பெற்றிருந்தார்.
இவர்
மனித ஒளிப்படக் கருவி (human
camera) என்று
அழைக்கப்படுகிறார். மாதிரிக்கு இதோ ஒரு படம்:
அஸ்பர்ஜர்
சின்றோம் உள்ள் டெனியல் தமெட்
(Daniel
Tammet) என்றவருக்கு
அபாரமான நினைவாற்றல்
பெற்றவர்.அவருக்கு
பத்து மொழிகள் தெரியும்,
பெரிதும்
அறியப்பட்டத மொழியான
ஐஸ்லாந்து மொழியை ஒரு வாரத்தில்
கற்றுக்கொண்டார்.
கிம் பீக்
(Kim
Peek) என்பவர்
அபாரமான ஞாபக சக்தி கொண்டவர்.
அவர்
12 000
புத்தகங்களை
படித்து வைத்திருகிறார்.
அவற்றில்
இருக்கும் எந்த தகவல் பற்றியும்
கேட்டால் எந்த தயக்கமும்
இன்றி உடனே சொல்லக்கூடிய
ஆற்றல் படைத்தவர்.
ஒரே
சமயத்தில் இரண்டு பக்கங்களை
வாசிக்கும் அசாதாரண ஆற்றல்
பெற்றவர்.
அவரால்
மூன்றே வினாடிகளில் இரண்டு
பக்கங்களை வாசிக்கவும் அதில்
உள்ள தகவல்களை திருப்பிக்
கூறவும் முடியும்.
வரலாறு,
புவியியல்,
உள்ளிட்ட
பதினைந்து பொருள்கள் பற்றி
சிறு சிறு தகவல்களையும்
அறிந்து வைத்திருக்கிறார்.
ஆனாலும்
இவருக்கு உள்ள ஆட்டிச பாதிப்பு பிறப்பிலேயே மூளையின்
அமைப்பின் குறைபாடு காரணமாக ஏற்பட்ட ஒன்று.
மூளையின்
அரைக் கோளங்களை இணைக்கும்
நரம்புப் பட்டம் (corpus callosum) இல்லாமல்
பிறந்தவர் இவர்.
ரெயின்
மேன் (1988)
என்ற
ஹாலிவுட் படத்தின் கதை இவரை
அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
அதன்
நாயகள் ஆட்டிசம் மட்டுமே உள்ளவனாக
சித்தரிக்கப் படுகிறான்.
ஹாலிவுட்டுக்கே
உரித்தான நகை முறண் இது!
டெம்பல் கிறண்டின் (Temple Grandin) என்பவர் ஓர் அமெரிக்கப் பேராசிரியர், விலங்குகள் சாந்த ச்றிவியல் துறையில் வக்குனராகப் பெயர் பெற்றவர். தனக்கு உள்ள ஆட்டிசம் தன்னை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவுபூர்வமாக எழுதி வருகிறார். அவரது சிந்தைப் பாங்கு எவ்வளவு வித்தியாசமானது என்பதை விளக்குக் கூறும் உள்ளுணர்வு வாய்க்கப் பெற்றவர். அவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது (Temple Grandin TV movie, 2010). மேலும் விவரங்களுக்கு அவரது வலைத்தளத்தைப் பார்க்கவும்:
டெம்பல் கிறண்டின் (Temple Grandin) என்பவர் ஓர் அமெரிக்கப் பேராசிரியர், விலங்குகள் சாந்த ச்றிவியல் துறையில் வக்குனராகப் பெயர் பெற்றவர். தனக்கு உள்ள ஆட்டிசம் தன்னை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவுபூர்வமாக எழுதி வருகிறார். அவரது சிந்தைப் பாங்கு எவ்வளவு வித்தியாசமானது என்பதை விளக்குக் கூறும் உள்ளுணர்வு வாய்க்கப் பெற்றவர். அவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது (Temple Grandin TV movie, 2010). மேலும் விவரங்களுக்கு அவரது வலைத்தளத்தைப் பார்க்கவும்:
இம்மாதிரியான
சிறப்புத் திறன் உள்ள மேதைகள்
சவண்ட் (savant)
என்று
அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால்
எல்லா சவண்ட்களும் ஆட்டிசம்
உள்ளவர்கள் அல்ல.
அறிவுத்திறன்
குறைபாடு உள்ளவர்களில் 1%
விதத்தினருக்கும் சவண்ட் திறமைகள் இருப்பதாக
ஆய்வுகள் கூறுகின்றன [1].
குழந்தைப்
பருவத்தில் மூளையில் சேதம்
ஏற்பட்டவர்ளுக்கும் சில
தனித்திறன்கள் இருக்கலாம். இம்மாதிரியான
அபாரத் திறமைகள் எந்த வித
வளர்ச்சிக் குறைபாடுகள்
இல்லாத 'சாதாரண'
மனிதருக்கும்
இருக்கலாம் என்பதையும்
நினைவுபடுத்திக் கொள்வது
நல்லது.
உதாரணமாக,
சகுந்தலா
தேவி என்ற இந்தியப் பெண்மணி
கணக்குகள் செய்வதில் அபாரமான
திறமை பெற்றவராக அறியப்படுகிறார்.
சிக்கலான
பல கணக்குகளை ஒரு நொடியில்
செய்து முடிக்கும் ஆற்றல்
பெற்ற இவர் 'மனிதக்
கணனி'
என்று
அழைக்கப்பட்டர்.
இவருக்கு
ஆட்டிச பாதிப்பு இருக்கவில்லை.
கணித
மேதை இராமானுஜனுக்கும்
ஆட்டிசம் இருந்ததாகத் தெரியவில்லை.
மேதைகள்
எல்லோரும் ஆட்டிசம் உள்ளவர்கள்
அல்ல,
ஆட்டிசம்
உள்ள எல்லோரும் மேதைகளும்
அல்ல.
இதுவரை ஆட்டிசத்தின் முக்கிய பண்புகள் விவரிவாக்கக் கூ றப்பட்டன. 10 வது இயலில் ஆட்டிசம் பற்றிய சுருக்த்தைப் பார்க்கலாம்.
புதிருக்கான விடை:



No comments:
Post a Comment